#BREAKING : அ.தி.மு.க போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் - எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிவிப்பு..!!

 
1

முழுமையான பயிர்கடன் தள்ளுபடியை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை அதிமுக சார்பில் போராட்டம்.

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு விவகாரம் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினையில் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகேதாட்டு பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற முயற்சி எடுக்காத தவெக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் வரும் ஆக.14-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் (சென்னை தவிர்த்து) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, இதர வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம்" என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக கடிதம் வெளியிட்டுள்ளனர். 'சொந்த மாவட்டங்களை விடுத்து, வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்ததை ஏற்க இயலாது. அதேவேளை, அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்ப்போம். ஆனால், போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்" என குறிப்பிட்டுள்ளனர்.

இது எங்களை புறக்கணிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. எங்களுக்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்ற உறுதி என்னானது? ஏற்கனவே நாங்கள் வகித்து வந்த பதவிகளை வழங்க வேண்டும்’’