#BREAKING : சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை..!
2023ம் ஆண்டு ஜூன் மாதம், கவர்னர் ரவி, பாஜ பிரமுகருமான குஷ்பு ஆகியோர் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில், திமுக பிரமுகரும், மேடை பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். கொடுங்கையூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது.மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க, மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
சர்ச்சை பேச்சு தொடர்பாக தொடரப்பட்டவழக்கை விசாரித்த, சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பி.ரேவதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளில், கலகத்தை துாண்டுவது என்ற குற்றச்சாட்டை மட்டும் அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை. ஆனால் மற்ற குற்றச்சாட்டுகளை, அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது எனக் கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. மேலும் ரூ.20,000 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டு உள்ளார்.

