#BREAKING: தவெக-வினர் ஷாக்..!! தவெகவுக்கு அதிமுக எப்போதுமே ஆதரவு தராது - கே.பி.முனுசாமி..!!

 
W

தவெக ஆட்சி அமைக்க அதிமுக தெரிவிப்பதாகவும் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடன் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொருளாளர் கே.பி.முனுசாமி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடனேயே இதைத் தெரிவிக்கிறேன். அதிமுக எப்பொழுதுமே தவெக-விற்கு ஆதரவு தராது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதிமுக மூத்த தலைவர்கள் இபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு கோர உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், முனுசாமியின் இந்த அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.