#BREAKING : இல்லத்தரசிகள் ஷாக்..! மகளிர் உரிமை தொகை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை - பட்ஜெட்டில் அறிவிப்பு..!
திமுக ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் திமுக இதனை ரூபாய் 1,500-ஆக உயர்த்தித் தருவதாக அறிவித்திருந்தது; அதேநேரம் தவெக தனது 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் 60 வயதுக்குள் இருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் என வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 2020-21 நிதியாண்டில் தனி நபர் மீது 67 ஆயிரத்து 87 ரூபாயாக இருந்த கடன், 2025-26 நிதியாண்டில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வெள்ளை அறிக்கை வாயிலாக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதில், தேர்தல் சமயத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அம்சங்கள் இடம்பெறுமா என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்துவது, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
பட்ஜெட்டில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்,
தமிழ்நாட்டில் நிதி நிலையை சீராக்கவும் 2 வருடங்கள் தேவை.நிதி ஆதாரம் இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் சாத்தியம் இல்லை.உண்மையான நலத்திட்ட பயனாளிகள அடையாளம் காண உள்ளோம். அரசு நலத்திட்ட பயனாளிகளை மறு ஆய்வு செய்ய உள்ளோம் என கூறினார்.
திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.54 லட்சம் கோடியாக உள்ளது.
2026-27 மொத்த பட்ஜெட் - ரூ.350027 கோடி
வருவாய் பற்றாக்குறை - ரூ.55,775 கோடி

