#BREAKING : சென்னையில் சீமான் கைது..!

 
1 1

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “நான் இந்த நாட்டின் குடிமகன் தான். இங்கே இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று சீமான் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட ஊரகத் துறை பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சீமான் அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். சீமான் கைது செய்யப்பட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க கூட அனுமதி இல்லையா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.