#BREAKING : கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்தார் சசிகலா..!
பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா பங்கேற்றார். அப்போது, தான் புதிய கட்சி தொடங்க உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று பிற்பகலில் கட்சியின் பெயரை அவர் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் அவர் தன் கட்சியின் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா.கட்சியின் சின்னமாக தென்னத்தோப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படும் சூழலில், ராமதாஸ் தரப்பு பாமக இதுவரை எந்தக் கூட்டணியையும் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸை சசிகலா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சசிகலா தொடங்க தொடங்கியுள்ள புது கட்சியுடன் பாமகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது கட்சி தொகண்டியபின் பேசிய சசிகலா, தொண்டர் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்; தென்னந்தோப்பு சின்னம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் ஒற்றுமையை விரும்புபவர் என்பதையே எங்கள் சின்னம் குறிக்கிறது என பேசினார்.

