#BREAKING: ஒரே நாளில் ரூ.5000 அதிரடியாக குறைந்தது.. தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!!

 
Gold

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தங்கம் மீது முதலீடு செய்யவும், நகை வாங்கவும் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது. திங்கட்கிழமை ரூ.120, செவ்வாய்க்கிழமை ரூ.400 மற்றும் நேற்று புதன்கிழமை ரூ.480 என இந்த உயர்வு மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை சரிந்ததால், மகிழ்ச்சியடைந்த நடுத்தர வர்க்கத்தினர், இந்த வார விலை உயர்வைக் கண்டு கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது மீண்டும் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிராபார்ப்பு நிலவி வருகிறது

.தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,560க்கும் ஒரு கிராம் ரூ.13,195க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கம்விலையில் மாற்றம் இல்லையென்றாலும், கடந்த 7 நாட்களில் ரூ.1,080 அளவு தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.215க்கும், ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது