#BREAKING : வீடுகளில் சூரியமின் சக்தி திட்டத்தை அமைக்க ரூ. 1 லட்சம் வரை மானியம்..!
வீடுகளில் சூரியமின் சக்தி திட்டத்தை அமைக்க ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். மின் விநியோகத்தை சீர்படுத்த கோவை - அரியலூர் மின்வழித் தடம் ரூ.700 கோடியில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
விருதுநகர் - கோவை மின் பகிர்மான திட்டம் வேகப்படுத்தப்படும். 1543 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். நுகர்வோருக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரத்திற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.1,541 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எரிசக்தி துறைக்கு ரூ.15,828 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வீட்டு வசதி துறை சார்பில் அனைவருக்கும் தரமான வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 1243 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் 1 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். மை ஹோம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.8,852 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புரட்சித் தலைவருக்கு பிறகு மீனவர்களின் நண்பனாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் விஜய் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கால்நடை, மீன்வளத்துறைக்கு ரூ.4880 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

