#BREAKING: சென்னைக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!

 
Rain

சென்னையில் நேற்று மழை வெளுத்துவாங்கியது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ் வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.

 

இந்தநிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது .திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

நேற்று சென்னையில் 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ள நிலையில் இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் வகைப்பாட்டின்படி, 24 மணி நேரத்தில் 20.44 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட், 11.56 முதல் 20.44 செ.மீ. வரையிலான மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட், 6.45 முதல் 11.55 செ.மீ. வரையிலான கனமழைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது.