#BREAKING : நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி..

 
rajini rajini

 நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள  நிலையில் படம் விரைவில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு  திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இரவு  10.30 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

rajini

சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று  காலை மூத்த மருத்துவர்களின் குழு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர். நலமுடன் இருப்பதாகவும், கேத் லேப் மூலம் இருதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராக உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.