#BREAKING: இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என்பது உண்மையா..? மத்திய அரசு மறுப்பு..!

 
bank

 

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவிப்பு.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை என வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இனி வங்கிகள் செயல்படும்.

 

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத் துறை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் சனி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.பின்னர், வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று, அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது 

இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுள்ள மத்திய நிதியமைச்சகம் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிவித்ததாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால் இதனை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. அப்படிப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அரசு இன்னும் வெளியிடவில்லை.