#BREAKING : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

 
1

கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இதன் மையப்புள்ளி, கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திலிருந்து 68 கி.மீ. வட-வடமேற்கில் அமைந்திருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், தற்போதைக்கு உயிர்சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த கட்டடங்களைக் காட்டும் பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.