#BREAKING : தமிழக அரசியலில் பரபரப்பு..! விஜயை சந்திக்க ஆளுநர் நேரம் கொடுக்கவில்லை..!

 
1

சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு.இதன் மூலம் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு 120 ஆக உயர்வு.

இந்நிலையில் பெரும்பான்மையோடு ஆளுநரை சந்திக்க சென்ற விஜய்க்கு ஆளுநர் நேரம் கொடுக்காதாதால் மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார்.

ஆளுநர் இன்றிரவு கேரளா புறப்படுவார் என கூறப்படும் நிலையில் 10ம் தேதிக்குள் பதவி ஏற்பதில் சிக்கல்! ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

தமிழ்நாடு அரசியலில் கடந்த நான்கு நாட்களாக நீடித்த பரபரப்புகள் அடங்குவதற்குள் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று இரவு 07.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், நாளையே பதவியேற்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். பதவியேற்பு விழா மேலும் தாமதமாகும் பட்சத்தில் கடும் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.