#BREAKING : திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 50 பேருக்கு அனுமதி..!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இன்று தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மலைக்குச் செல்வதற்காக பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த பக்தர்கள் அனைவரும் மலைக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயிலைச் சுற்றிலும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர். இதனால் மலைப்பகுதியைச் சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தீபம் ஏற்றுகிற தூண் அருகே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றும், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே நாளை வந்து தீபத்தூணை பார்த்துக்கொள்ளுமாறும் வருகை தருகிற பக்தர்களிடம் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 50 பக்தர்களுக்கு மட்டும் மலை மீது ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் வலியுறுத்தியன் பேரில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணிக்குள் பக்தர்கள் குழு மேலே ஏற அனுமதிக்கப்படுவர் என வழிகாட்டுதல் குழு தெரிவித்திருக்கிறது.
#JustNow || திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 50 பேருக்கு அனுமதி! #ThiruparankundramDeepam | #PolimerNews https://t.co/G7nRuHUXIA
— Polimer News (@polimernews) November 28, 2026
#JustNow || திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 50 பேருக்கு அனுமதி! #ThiruparankundramDeepam | #PolimerNews https://t.co/G7nRuHUXIA
— Polimer News (@polimernews) November 28, 2026

