#BREAKING : பசும்பொன் மக்கள் தேசம் கட்சி இசக்கி ராஜா கைது..!!

 
Q

தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் |உரிமையாளரிடம் ரூ.1 கோடி மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்த நிலையில் பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா கைது.

தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டதங்கத்தில் வேறு உலோகம் அதிகம் கலந்துள்ளதாக கூறி மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 2023-ல் ஐந்து சவரன் தங்கம் வாக்கிய நிலையில், அது போலி எனக் கூறி தற்போது உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து இசக்கி ராஜாவை போலீசார் கைது செய்தனர்.