#BREAKING: ஆக.22ல் கட்சிக் கொடி அறிமுகம்.. செப். இறுதிக்குள் மாநாடு.. அரசியலில் தீவிரமாகும் விஜய்..

 
vijay

ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை நடிகர்  விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேபோல்  தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி 3 விதங்களாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.   பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடத்தி   கட்சிக்கொடியனை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. 

vijay

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த கட்சிக் கொடியினை சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.  இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  அதேபோல கட்சியினுடைய முதல் மாநாடு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்துவதற்கான,  அடுத்த கட்ட நடவடிக்கைகளையும்  மேற்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது.

 ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற கொள்கையை முன்மொழிந்துள்ள விஜய், கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, அனைவரும் சமம் என்கிற வகையில்  கட்சிக்கொடி இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது கட்சியின் கொடியினை நடிகர் விஜய் பனையூரில் இருக்கக்கூடிய கட்சி அலுவலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார். தொடர்ந்து தவெகவின் முதல் மாநாட்டினையும் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்.