#BREAKING : ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ வைத்திலிங்கம் ராஜினாமா..!!!
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர்.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தி.மு.க.வில் இன்று (புதன்கிழமை) இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளனர். திமுகவில் இணைய முடிவு செய்துள்ள நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளா. ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார்.


