#BREAKING : கும்மிடிப்பூண்டியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் கவலைக்கிடம்..!

 
1

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்க்கண்டிகை சிப்காட்டில் உள்ள எத்தனால் தயாரிப்பு ஆலையில், தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒடிசாவைச் சேர்ந்த தனஞ்செய் மாலி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த மேலும் 4 ஊழியர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.