#BREAKING : நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது..!!
Nov 9, 2025, 21:46 IST1762704961870
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது - கேரள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி) நாளை முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


