#BREAKING : வெளியானது நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்.!!

 
neet

மே 3-ந் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தயாராகி வருகின்றனர்.

ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான neet.nta.nic.in அல்லது exams.nta.ac.in/NEET-ல் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம்.

இணையதளத்திற்குச் சென்று உங்கள் விண்ணப்ப எண் (Application Number) பதிவிடவும்.

பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி லாகின் செய்யவும்.

ஹால் டிக்கெட்டைப் சரிபார்த்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஹால் டிக்கெட்டுடன், பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் செல்லுபடியாகும் அரசு அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை) ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.