#BREAKING : நாளை த.வெ.கவில் இணைகிறேன் - எம்ஆர் விஜயபாஸ்கர்..!

 
1

கரூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகிய எம்ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு.நாளை தவெகவில் இணைய உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறும் விழாவில் தவெகவில் இணைகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

"எனது பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக தவெகவில் இணைகிறேன். தவெகவில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நாளை காலை 9.00 மணி அளவில், மாமல்லபுரத்தில் (மகாபலிபுரம்) உள்ள 'ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்' (Four Points by Sheraton) ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள மாபெரும் இணைப்பு விழாவில், அவர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணையவுள்ளார். அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் கரூர் மாவட்டத்தில், அதன் முக்கிய முகமாக விளங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.