#BREAKING : தவெக நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

 
Q

கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற ஊடகத்தினர் போலீஸாரால் வெளியேற்றம்; நிகழ்ச்சி நடைபெறும் பிரதான அரங்குக்கு வெளியே உள்ள சிறிய அரங்கில் அமர கட்டாயப்படுத்தும் காவல்துறை.

கரூரில் தவெக சார்பில் இன்று(ஜூலை 10) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காலை முதலே தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாஸ் இருந்தும் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.