#BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..!

 
1

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த வாரி பட்டாசு ஆலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் தீவிரத்தால் கட்டடம் இடிந்து தரைமட்டமானதில், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.