#BREAKING : பிரபல மலையாள சீரியல் நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார்..!

 
1


மலையாளத் தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்., 17) அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 41. சித்தார்த்தின் மறைவு ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து, மறைந்த நடிகருக்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.


அவரது மரணச் செய்தியை நடிகை சீமா ஜி நாயர் பகிர்ந்துள்ளார். “எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போய்விட்டன… பிரபலமான தொலைக்காட்சித் தொடர் நடிகர் சித்தார்த் வேணுகோபால் வலியற்ற உலகிற்குப் பயணம் செய்துவிட்டார்… கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் மனமும் உடலும் சோர்வடைந்தபோதும், உனக்காகப் போராடினேன்; உன் உயிரைத் திரும்பக் கொண்டுவர ஓடிக்கொண்டே இருந்தேன்… இன்று நீ இனிமேலும் துன்பப்படக்கூடாது என்று கடவுள் தீர்மானித்துவிட்டார்… என்னால் இதைத் தாங்க முடியவில்லை சித்தார்த், நான் உடைந்து அழுகிறேன்.

மலையாளத் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பல நடிகர்கள் மறைந்த நடிகருக்கு அஞ்சலி செலுத்தினர். 

சுமார் இரண்டு ஆண்டுகளாக நோயுடன் போராடி வந்த நிலையில், அவரது மரணம் குடும்பத்தினரை தவிப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரளம் மாநிலம் திருச்சூரை அடுத்த சாலக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர் சித்தார்த். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.