#BREAKING : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார்..!

 
1

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் சற்றுமுன் காலமானார்.

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம், பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் அஜித்பவார் உட்பட விமானத்தில் இருந்த பலர் பலத்த காயமடைந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அஜித்பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த பாராமதி விமான நிலையத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தீயணைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் இயந்திரக் கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிய அஜித் பவாரின் திடீர் மறைவு குறித்த செய்தி கேட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.