#BREAKING : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நிறைவு: வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு?

 
Q

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, திட்டமிட்டபடி மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், மாலை 6 மணிக்கு முன்பாகவே வாக்குச்சாவடி வளாகத்திற்குள் வருகை தந்து வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, தேர்தல் துறை அதிகாரிகளால் வரிசை எண்களுடன்கூடிய டோக்கன்கள் வழங்கப்பட்டனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் பத்திரமாகப் பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பூத் ஏஜென்ட்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் பலத்த ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மொத்தம் உள்ள 2,13,689 வாக்காளர்களில் மாலை 5:00 மணி நிலவரப்படி 83.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளர்களில் மாலை 5:00 மணி நிலவரப்படி 78.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தாராபுரம் இடைத்தேர்தல்.. ஆறு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 80.31% வாக்குகள் பதிவு..

மதுராந்தகம் = 85.90%