#BREAKING : லயோலா கருத்து கணிப்பு வெளியீடு :ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் :விஜய்க்கு 2வது இடம்..! அப்போ இபிஎஸ்..?

 
1 1

சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள்  2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி, கடந்த பிப்., 5ம் தேதி துவக்கினர். 

70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, ஜூன் மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி , தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்து, 73.30 சதவீதம் பேர் பழனிசாமிக்கும், 67.99 சதவீதம் பேர் உதயநிதிக்கும், 64.58 சதவீதம் பேர் அண்ணாமலைக்கும், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்தனர்.


இன்றைய அரசியல் சூழலில் மீண்டும் இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்றது அதில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறினார் தவெக தலைவர் விஜய். 


இதோ அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் 

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 'ஸ்டாலினே மீண்டும் முதல்வராவார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி, தவெக தலைவர் விஜய் 2ம் இடம் பிடிப்பார். விஜய் வருகையால் சீமானுக்கு பாதிப்பு இல்லை' என கூறப்பட்டுள்ளது.