#BREAKING : தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்..!!
Updated: Jul 13, 2026, 16:38 IST1783940902168
தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணியை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்ட லயோலா மணிக்கு முதலமைச்சர் விஜய் நியமன ஆணையை வழங்கினார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக ஏற்கனவே இருந்தவர் திண்டுக்கல் லியோனி. தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் தற்போது லயோலா மணியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக திரு. லயோலா மணி அவர்கள் பணி நியமனம் பெற்றார். pic.twitter.com/UDXUgvWbwZ
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) July 13, 2026

