#BREAKING : மடிக்கணினி திட்டத்தின் பெயர் மாற்றம்..!

 
1

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.10,000 கோடியில் 1 லட்சம் மாணவர்கள் தங்குவதற்காக விடுதிகள் கட்டப்படும்.

மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். உயர் கல்வித்துறைக்கு ரூ. 8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் பெயர், தற்போது ”வெற்றி மடிக்கணினி” திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருக்கிறார்.

அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்..

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது