#BREAKING : கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை நீக்கம்..!

 
1 1

நாடு முழுவதும் சாலைகள் விரிவாக்கம், இட நெருக்கடி, வாகனங்கள் பெருக்கம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மறுபுறம் இதைச் சமாளிக்க மக்கள் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து கட்டண நிர்ணயிக்கப்பட்ட தனியார் சேவைகளின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கின்றனர். இதனால், இவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சேவை அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் உள்ளது. அங்கும் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த பைக் டாக்சி சேவைக்கு கடந்த ஜூன் மாதம் கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை தடை விதித்தது.

இத்தடையால் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் சித்தராமையாவிடம் முறையிட்டன.


இதற்கிடையில்,  கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.
இதன் மூலம் ஓலா (Ola), ஊபர் (Uber) மற்றும் ராபிடோ (Rapido) போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.