#BREAKING : ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

 
1

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக (27), பாமக (அன்புமணி) (18), அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


இதனைத் தொடர்ந்து இக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று(மார்ச் 24) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமமுகவுக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது