#BREAKING : பயணிகளுக்கு ஜாக்பாட்! விமான எரிபொருள் வரியை பாதியாகக் குறைத்த தமிழக அரசு!

 
govt

விமான எரிபொருளுக்கான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. முன்பு 29 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 16 சதவீதமாக வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை வரும் அக்., 31ஆம் தேதியில் இருந்துஅமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பயணக் கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான எரிபொருளுக்கான (Aviation Turbine Fuel - ATF) மதிப்புக்கூட்டு வரியை (VAT) கணிசமாகக் குறைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுவரை விமான எரிபொருளின் மீது விதிக்கப்பட்டு வந்த 29 சதவீத மதிப்புக்கூட்டு வரி (VAT), தற்போது அதிரடியாக 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 13 சதவீதம் வரை வரி குறைக்கப்பட்டுள்ளமை விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

வரிக்குறைப்பின் மூலம் இயக்கச் செலவு மிச்சப்படுவதால், சென்னை மற்றும் பிற விமான நிலையங்களிலிருந்து நாட்டின் பல்வேறு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புதிய விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து எளிமையாகவும் குறைந்த செலவிலும் மாறும்போது, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தமிழகத்தில் மேலும் அதிகரிக்கும்.

தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகப் பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் கிடைப்பதன் மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும்.

தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், விமான நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை ஒரு தொலைநோக்குப் பார்வையிலான சிறந்த முடிவாகும். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த அரசாணை, தமிழ்நாட்டின் வான்வெளிப் போக்குவரத்துத் துறையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.