#BREAKING : 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

 
Q Q

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி (ஜனவரி 11) குஜராத்தின் வதோதராவில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஹென்றி (62), கான்வே (56) ஆட்டமிழந்தனர். யங் (12). பிலிப்ஸ் (12) ஆகியோர் ஜொலிக்கவில்லை. பின்னர் வந்த ஆல் ரவுண்டர் மிட்சலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 84 ரன்னில் அவுட்டானார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தல 2 விக்கெட்டுகளையும், குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

301 ரன் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 26 ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கோலி சிறப்பாக ஆடி ரன்னை சேர்த்தனர். கில் அரைசதம் (56) அடித்து அவுட்டானார். மறுமுனையில் கோலி ரன் குவிப்பை நிறுத்தவில்லை. துணை கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 93 ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு வந்த ஜடேஜாவும் 4 ரன்னில் அதே ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 93, சுப்மன் கில் 56, ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் எடுத்தனர்