#BREAKING: இந்தியா இமாலய வெற்றி..!!
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. குரூப் ஏ பிரிவில் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தானுக்கு முனிபா அலி, ஜூல்பிஹரும் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். ஆரம்ப முதலே பாகிஸ்தான் கொடுத்த விக்கெட் வாய்ப்புகளை இந்திய வீராங்கனைகள் கோட்டை விட்டனர்.
இருப்பினும், அணியின் ஸ்கோர் 27ஐ எட்டிய போது, பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் அடுத்தடுத்து நடையைக் கட்டினர்.
இதனால், அந்த அணி 18.1 ஓவரில் 55 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இது டி20 கிரிக்கெட்டில் அந்த அணியின் மிகக்குறைந்தபட்ச ஸ்கோராகும். அந்த அணியின் ஜூல்பிஹர் 14 ரன்னும், முனிபா அலி 13 ரன்னும் எடுத்ததே அதிகபட்ச தனிநபர் ரன்னாகும். மற்ற வீராங்கனைகள் ஒற்ற்றை இலக்கில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சாரணி, பிரேமா ரவத் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர் 2 விக்கெட்டும், ஷபாலி வர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 56 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அணிக்கு, ஷபாலி வர்மா (12), ஸ்மிரிதி மந்தனா (9), பிரதிகா ராவல் (4) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் (18), தீப்தி ஷர்மாவின் (12) நிதான ஆட்டத்தால், இந்திய அணி 8.4 ஓவர்களில் வெற்றி பெற்றது.

