#BREAKING | என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை - அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம் கருத்து..

 
#BREAKING | என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை - அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம் கருத்து.. 


RSS பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். பதவியைப் பறித்தால் கவலை இல்லை என தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. என். தளவாய்சுந்தரம், M.L.A., அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தன் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றும்,  தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் தான் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடக்கி வைத்தேன் என்றும் கூறியுள்ள தளவாய் சுந்தரம்,   நீக்கப்படுவிட்டால் ஓகே ரைட் என செல்ல வேண்டியது தான் என்றார்.  மேலும், ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் குறையும் என இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.