#BREAKING :"நான் துணிந்து சொல்கிறேன்.. அதிமுக-வில் இருப்பவர்களால் இதை சொல்ல முடியுமா.? - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பேச்சு!

 
1

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்  என். ஆனந்தை வரவேற்கும் போது, "புஸ்ஸி ஆனந்த் என்று சொல்லமாட்டேன்... பிஸி ஆனந்த் ஆக மாறியிருக்கும் ஆனந்த் அவர்களே..." என குறிப்பிட்டார்

"நான் துணிந்து சொல்கிறேன்.. அதிமுக-வில் இருப்பவர்களால் இதை சொல்ல முடியுமா.? இன்று என் சட்டை பையில் இருப்பது புரட்சித் தலைவி அம்மாவின் படம்.. இதை அனுமதித்தவர் தவெக தலைவர் முதல்வர் விஜய் தான்.. அவர் என்னை அழைத்து, நீங்கள் அம்மா புகைப்படத்தை வைத்துக்கொள்ளுங்கள்.. அப்போது தான் எனக்கு மகிழ்ச்சி என்றார்..ம்பி வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் CM விஜய்"


``துரோகம் அங்கேதான்!''

"புரட்சி தலைவி அம்மாவை 21 நாட்கள் சிறையில் வைத்தவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்ற சதிகாரர்கள் இருக்கிறார்களே... அதை தகர்த்தெறிய வேண்டுமா இல்லையா? தகர்த்தெறியும் சக்தியாகத்தான் இங்கே இவர்கள் இணைந்திருக்கிறார்கள். துரோகம் இங்கே இல்லை. அங்கேதான் இருக்கிறது. அதை இவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்"

வயதானவர்களை வைத்துக் கொண்டு நேற்று மகளிரணி கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் பட்டாளம் இங்கு இருக்கிறது. தடுமாறுபவர்கள் அங்கே இருக்கிறார்கள் என இணைப்பு விழாவில் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டத்தை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்.

எம்.ஜி.ஆர் வைத்திருந்தது இயக்கம். அம்மா வைத்திருந்தது இயக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கம்பெனி. கார்பரேட் கம்பெனி!

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ., இருந்தவரை தான் அதிமுக கட்சி. ஈபிஎஸ்.,யிடம் இருப்பது கார்ப்பரேட் கம்பெனி. 10 பேர், அவருக்கு பின்னால் இருக்கிறார்கள். 
"திமுக ஆதரவோடு ஈபிஎஸ் முதல்வராக நினைத்தது துரோகம். அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட என்னை தாங்கியது தவெக. நல்ல தலைமையை ஏற்று தவெகவில் இணைகின்றனர். தவெகவுக்கு வந்தவர்களை வரவேற்கிறேன்" என பேசினார்.