#Breaking திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இதோ!

 
dmk

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

congress

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 9.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்வரும் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதிகளின் விவரம்


1. திருவள்ளூர் (தனி)
2. கடலூர்
3. மயிலாடுதுறை
4. சிவகங்கை
5. திருநெல்வேலி
6. கிருஷ்ணகிரி
7. கரூர்
8. விருதுநகர் 
9. கன்னியாகுமரி 
10. புதுச்சேரி