#BREAKING : புதுக்கோட்டை அருகே அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து..!!
Nov 12, 2026, 11:02 IST1794461573939
பட்டுக்கோட்டையில் இருந்து 50+ பயணிகளுடன் பழனிக்கு சென்று கொண்டிருந்தபோது விராலிமலை சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் பழனிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, புதுக்கோட்டை விராலிமலை சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்ததோடு, விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

