#BREAKING : மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை: சுப்ரீம் கோர்ட்டு..!!

 
Q Q

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வாசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது:

மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பே முழுமையாக அதிகாரம் செலுத்தக்கூடிய அமைப்பு

மசோதாவை காரணம் எதுவும் கூறாமல் கிடப்பில் போடும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை .

மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் வைத்து இருந்தால், சட்டமன்றத்திற்கு அதற்கான காரணத்தை கவர்னர் சொல்ல வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

 தேர்வு செய்யப்பட்ட அரசு அமைச்சரவைதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்.