#BREAKING : குட் நியூஸ்..! ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த தங்கம் விலை...!
May 1, 2026, 18:18 IST1777639721888
தங்கம் விலை தொடந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1,040 வரை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 130 குறைந்து ரூ.13,920 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை குறைந்து ரூ.1,11,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது.
வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி அதை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

