#BREAKING : குட் நியூஸ்..! வேளாண் பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்கபடும் - அமைச்சர் வினோத்..!

 
1

 தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். வேளாண்மையையும் பாதுகாக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.

டெல்டா பகுதியில் 2,509 கி.மீ. வாய்க்கால்கள் ரூ.10 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளன. மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படாததால், விவசாயிகளுக்கு ரூ. 134.83 குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் 8,26,000 விவசாயிகள் பயன் அடைந்தனர்.

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து, நீர்ப்பாசன பரப்பை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்காக ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 600 கோடியில் மண்வள பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

உயர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

உயர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தலா ரூ.4000 சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படும்.

ரூ.4 கோடியில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.