#BREAKING : குட் நியூஸ்..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,640 குறைந்தது..!!
தங்கம் விலை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 6 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த தங்கம் விலையானது அதிரடியாக நேற்று முன்தினம் காலை ரூ. 2160, மாலை ரூ. 3,200 என இரண்டு முறை குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதன் மூலம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 9,500 குறைந்தது. இந்நிலையில் நேற்று சற்று விலை கூடியிருக்கிறது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்று (மார்ச் 21) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

