#BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது..!!

 
Q

தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் குறைந்து அடுத்த 3 நாட்களில் அடுத்தடுத்து ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையேற்றம் ஏற்கனவே கணிக்கப்பட்டது தான் என்றாலும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஒரு சவரன் ரூ. 1.20 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க வரி விகிதம், உலக நாடுகளிடையேயான போர் பதற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

 

சென்னையில் நேற்று (பிப்.24) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,19,440க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ ரூ.2,95,000க்கு விற்கப்படுகிறது.