#BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,560 குறைந்தது..!!

 
Gold

தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ. 2,680 குறைந்திருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும் இந்த விலை குறைவு நிரந்தரமில்லை என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தற்போது நிலையற்ற தன்மையில் உள்ள உலகளாவிய பொருளாதாரம் சீரடைய துவங்கும்போது தங்கம் விலை உயரத் தொடங்கும் என்றும், அப்படி ஏற்றம் காணும் பட்சத்தில் ஒரு சவரன் விலை ரூ. 2 லட்சம் வரை கூட உயரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கும்போது தங்கம் விலை உயர்வது வழக்கம். ஆனால் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில், தங்கம் விலையும் சரிந்திருப்பது சர்வதேச சந்தையின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது.

நேற்று (அக்டோபர் 22) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும், ஒரு சவரன் ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.225-க்கு விற்பனையானது

இன்று (அக்டோபர் 23) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,400 குறைந்து, ரூ.1,04,480-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.225-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,25,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த சூழலில், இன்று மீண்டும் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.

கடந்த 10ம் தேதி முதல் இதுவரை சவரனுக்கு ரூ.6,560 குறைந்துள்ளது