#BREAKING வரலாறு காணாத தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,000 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடி ஏற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 16ம் தேதி தான் சவரன் ரூ. 57,000ஐ தாண்டியது. தொடர்ந்து அக்.17 - ரூ. 160, அக்.18 - ரூ.640, அக்.19- ரூ. 320 , அக்.21- ரூ.160 , அக்.23 - ரூ.320 என ஏறுமுகத்திலேயே இருந்து வந்தது.

பின்னர் 24ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ. 440 சரிந்தது. இது நகைப்பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்திய நிலையில், அது ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. மீண்டும் கடந்த 25ம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், அக்.26ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 ஏற்றம் கண்டு ஒரு சவரன் ரூ. 58,880க்கும், ஒரு கிராம் ரூ. 7,360க்கும் விற்பனையானது. இதனையடுத்து நேற்றைய தினம் ( அக்.28) சவரனுக்கு ரூ. 360 குறைந்திருந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ. க்கும், ஒரு சவரன் ரூ. க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் எகிறிய தங்கம் விலை சென்னையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 59,000 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 7,375க்கு விற்பனையாகிறது. கடந்த 13 நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் இருப்பது போன்று தோற்றமளித்தாலும் சவரனுக்கு ரூ. 2000 ஏற்றம் கண்டிருக்கிறது.


