#BREAKING : வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த த.மா.கா. தலைவர் ஜிகே வாசன்..!
Updated: Mar 27, 2026, 12:27 IST1774594676539
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகா 5 , ஜான் பாண்டியனின் ஐஜேகேவுக்கு 2, தமமுகவுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள் பட்டியல் இதோ :
ஒட்டன்சத்திரம்
ஈரோடு மேற்கு
ராணிப்பேட்டை
கிள்ளியூர்
கும்பகோணம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனன. இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
தமாகா வேட்பாளர் பட்டியல்
- ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர் (தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ)
- ஈரோடு மேற்கு - எம். யுவராஜா (தமாகா பொதுச் செயலாளர்)
- ராணிப்பேட்டை - வி.எம். கார்த்திகேயன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்)
- கிள்ளியூர் - சைமன் (தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர்
- கும்பகோணம் - எம்.கே.ஆர் அசோக் குமார் (தமாகா மாநில செயலாளர்)

