#BREAKING : இனி ஆண் அரசு பணியாளர்களுக்கும் பேறுகால விடுப்பு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!
Nov 26, 2026, 14:26 IST1795683391150
முதல்வர் விஜய் அறிக்கை; அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்க கோரிக்கை வரப்பட்டது. குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய், குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
எனவே, திருமணமான அரசு ஆண் ஊழியர்களுக்கு, அவர்களின் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக, 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியில் இருந்து 6 மாதங்களுக்காகவோ எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

