#BREAKING : முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி..!

 
1 1

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார்.

அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


இதேபோன்று பிரதமர் மோடிக்கும், மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை. பதவியில் இருந்த காலத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.ஜெக்தீப் தன்கர் (வயது 74). இவர் 2022 முதல் 2025ம் ஆண்டுவரை நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தார். 


இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் கடந்த சனிக்கிழமை வீட்டில் வைத்து 2 முறை மயக்கமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தன்கருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தன்கர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. தற்போது தன்கர் நலமுடன் உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.