#BREAKING : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி?

 
Q

செந்தில் பாலாஜி சமீபத்தில்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய புகாரில் சிக்கினார்.

செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரின் தூண்டுதலின் பேரில் தான் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கூறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனால் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றனர். அப்போது நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை விதித்தது. தினமும் 2 முறை சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி கையெழுத்திட செல்லவில்லை. அசோக் குமார் மட்டுமே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இந்த சமயத்தில் செந்தில் பாலாஜி எங்கே என்று கேட்டதற்கு, ''அண்ணனுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனையில் உள்ளார்'' என்று அசோக் குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், எந்த ஹாஸ்பிடல் என்ற தகவலை அவர் கூறவில்லை. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.