#BREAKING : ஆந்திர முன்னாள் துணை முதலமைச்சர் அல்லா நானி காலமானார்..!!

 
Q

ஆந்திரப் பிரதேச அரசியலில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (அல்லா நானி) மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

அவர் தனது அரசியல் வாழ்க்கையை முதலில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கி வெற்றி பெற்றார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஜெகன் மோகன் ரெட்டி அரசின் போது மாநிலத்தின் துணை முதலமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் சுகாதார விவகாரங்கள் துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யிலிருந்து விலகிய அவர், சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

இவரது திடீர் மறைவு பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், தங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டனர்